வால்மீகி காப்பகத்தில் மீண்டும் இந்தியக் காட்டெருமை
March 13 , 2020 1721 days 604 0
உலகின் மிகப்பெரிய காட்டெருமை இனமான இந்தியக் காட்டெருமையானது (போஸ் கௌர்ஸ்) பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகத்திற்கு (Valmiki Tiger Reserve - VTR) மீண்டும் திரும்பியதோடு மட்டுமல்லாமல், புல்வெளிப் பரப்பளவு அதிகரிப்பின் காரணமாக அங்கு இனப்பெருக்கம் செய்யவும் தொடங்கியுள்ளன.
VTR ஆனது 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டது.
இது பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் 899 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இது வடக்கே நேபாளத்தின் சிட்வான் தேசியப் பூங்காவையும் மேற்கே உத்தரப் பிரதேசத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு முதல் இந்தியக் காட்டெருமை இனங்கள் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் ‘பாதிக்கப்படக்கூடிய’ இனங்களாகப் பட்டியலிடப் பட்டுள்ளன.