TNPSC Thervupettagam

வால்மீகி புலிகள் காப்பகம் – பீகார்

July 8 , 2021 1110 days 583 0
  • பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகத்தின் அதிகாரிகள் வல்லூறுகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
  • இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சமீபத்தில் 150 கழுகுகள் தென்பட்டதை அடுத்து இது திட்டமிடப் பட்டுள்ளது.
  • இந்தப் புலிகள் காப்பகமானது இந்தியாவிலுள்ள இமாலய தராய் வனப்பகுதிகளின் கிழக்கத்திய வரம்பினை உள்ளடக்கியுள்ளது.
  • இது நமது நாட்டின் கங்கைச் சமவெளி சார்ந்த உயிரிப் புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளது.
  • இந்த வனப்பகுதியில் பாபர் மற்றும் தராய் வகை படுகைகளும் உள்ளன.
  • இந்திய பிளையிங் ஃபாக்ஸ் எனப்படும் வௌவால்களும் இங்கு காணப் படுகின்றன.
  • இந்தியாவில் ஒன்பது வகை வல்லூறு இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்