TNPSC Thervupettagam

வாழத்தகுந்த இடங்களின் சர்வதேசத் தரவரிசை

August 21 , 2017 2523 days 947 0
  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்-உலகின் சிறந்த வாழத்தகு நகரம்.
  • இந்த தரவரிசையின்படி தொடர்ந்து ஆறாண்டுகளாக மெல்போர்ன் நகரமே உலகின் மிகச்சிறந்த வாழத்தகு நகரமாக பட்டியலிடப்பட்டு வருகிறது.
  • எக்கனாமிஸ்ட் இதழின் நுண்னறிவுப் பிரிவு (Economist Intelligence Unit) வெளியிட்ட சர்வதேச வாழத்தகு தரவரிசைப்பட்டியலில் 140 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற 30 காரணிகள் தரவரிசைப் பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
  • மெல்போர்னுக்கு அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவும் கனடாவின் வான்கூவரும் இடம்பெற்றுள்ளது
  • தரவரிசைப்பட்டியலின் கடைசி இடத்தில் (140 வது இடத்தில்) சிரியாவின் டொமாஸ்கஸ் இடம்பெற்றிருக்கிறது.
  • தரவரிசைப்பட்டியலில் முதல் பத்து இடங்களிலோ (அல்லது) கடைசி பத்து இடங்களிலோ இந்திய நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்