இது உலக வனவிலங்கு நிதியம் (WWF - World Wildlife Fund) மற்றும் இலண்டனின் விலங்கியல் சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
1970 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலக வனவிலங்கு எண்ணிக்கையில் 68% குறைந்துள்ளதாக இது கண்டுபிடித்து உள்ளது.
முக்கிய அம்சங்கள்
பூமியின் பனியற்ற நிலப்பரப்பில் 75% நிலப்பரப்பானது ஏற்கெனவே மாற்றம் அடைந்துள்ளது. பெரும்பாலான பெருங்கடல்கள் மாசுபாடு அடைந்துள்ளன.
இந்தக் காலகட்டத்தின் போது 85%ற்கும் மேற்பட்ட ஈரநிலங்கள் அழிக்கப் பட்டு உள்ளன.
‘உலக அளவில் நிலப் பயன்பாட்டின் காரணமாக அதிகமான பல்லுயிர்ப் பெருக்க இழப்பானது ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 57.9% என்ற அளவிலும் வட அமெரிக்காவில் 52.5% என்ற அளவிலும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 51.2% என்ற அளவிலும் ஆப்பிரிக்காவில் 45.9% என்ற அளவிலும் ஆசியாவில் 43% என்ற அளவிலும் காணப்படுகின்றது.
மிக அதிக வனவிலங்கு எண்ணிக்கை அழிப்பானது 94% என்ற அளவில் இலத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4% என்ற அளவுடன் 45,000 உயிரின வகைகளுடன் மிகப்பெரிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடான இந்தியாவானது ஏற்கெனவே 6 தாவர இனங்களை இழந்துள்ளது.
இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் 12% வனப்பாலூட்டிகளையும் 19% ஈரிட வாழ்விகளையும் 3% பறவை இனங்களையும் இழந்துள்ளது.
இந்தியாவில் முதுகெலும்புள்ள உயிரினங்களின் எண்ணிக்கையானது 60% என்ற அளவில் குறைந்து வருகின்றது.