TNPSC Thervupettagam

வாழை இழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கட்டுப் போடும் துணி

March 9 , 2024 261 days 277 0
  • அசாம் மாநிலத்தில் உள்ள மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்தின் (IASST) அறிவியலாளர்கள் வாழை இழைகளைப் (நார்) பயன்படுத்தி, ஒரு நிலையான மற்றும் குறைந்த விலையிலான, காயங்களுக்கு கட்டுப் போடும் ஒரு துணியினை உருவாக்கியுள்ளனர்.
  • அறிவியலாளர்கள் வாழை நார்களை, சிட்டோசன் மற்றும் குவார் கம் என்ற பசை போன்ற உயிரி சார்ந்த பலபடிமச் சேர்மங்களுடன் இணைத்து இந்தப் புத்தாக்கமிக்க துணிகளை உருவாக்கியுள்ளனர்.
  • கூடுதலாக, வைடெக்ஸ் நெகுண்டோ L. என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாறு ஏற்றப் பட்ட இந்தத் துணி ஆனது, செயற்கை முறை மருந்து உள்ளீடு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாடு ஆகியவற்றில் அதன் சிறப்பான செயல்திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்