20-வது வாழ்க்கைத் தரத்திற்கான மெர்சர் தரவரிசை 2018ன் படி உலகம் முழுவதும் உள்ள 450 நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்காய்வுகளில், இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் பூனா ஆகிய இரு நகரங்களும் 142வது இடத்தைப் பெற்று வாழ்வதற்கான சிறந்த இந்திய நகரங்களாகத் திகழ்கின்றன.
இவற்றைத் தொடர்ந்து பெங்களூரு (149), சென்னை (151), மும்பை (154), கொல்கத்தா (160) ஆகிய நகரங்கள் உள்ளன. டெல்லி 162 ஆவது இடத்தைப் பிடித்து இவ்வறிக்கையின் படி இந்திய நகரங்களில் கடைசி இடத்தில் உள்ளது.
தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது, சுரிச் இரண்டாவது இடத்திலும், ஆக்லாண்டு மற்றும் முனிச் ஆகியவை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
வான்குவெர் நகரம் 5-வது இடத்தைப் பிடித்து, தரவரிசையில் வட அமெரிக்காவின் முதலிடத்தைப் பிடித்த நகரமாக (Highest – Ranked city) விளங்குகிறது.
சிங்கப்பூர் (25), மான்டிவீடியோ (77) ஆகியவை முறையே ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் முதலிடத்திலுள்ளன.
இந்த ஆண்டு மெர்சர், நகரங்களின் சுகாதாரத்திற்கென தனி தரவரிசையை அளித்துள்ளது. இத்தரவரிசை, கழிவுகளை அகற்றுதல், கழிவு நீர் உட்கட்டமைப்பு வசதிகள், தொற்று நோய்களின் அளவுகள், காற்று மாசுபாடு, நீர் இருப்பு மற்றும் நகரங்களின் தரம் ஆகியவற்றை ஆராய்ந்தது.
நகர சுகாதார தரவரிசையில் ஹொனோலுலு முதலிடத்திலும், ஹெல்சின்கி மற்றும் ஒட்டோவா ஆகிய இரு நகரங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
வங்கதேச தலைநகர் டாக்கா (230) மற்றும் ஹெய்ட்டி தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் (231) ஆகியவை இத்தரவரிசையில் அடிநிலையில் உள்ளன.
பெங்களூரு 194வது இடத்தைப் பிடித்து இந்திய நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை (199) மற்றும் பூனா (206) ஆகிய நகரங்கள் உள்ளன.
கொல்கத்தா மற்றும் புதுதில்லி ஆகிய இரண்டும் முறையே 227 மற்றும் 228 ஆகிய இடங்களைப் பிடித்து உலக அளவில் கடைசி 5 நகரங்கள் பட்டியலில் உள்ளன.