உயிரியலாளர், இயற்கை வரலாற்றாசிரியர் மற்றும் ஒளிபரப்பாளர் சர் டேவிட் அட்டன்பரோவுக்கு "சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்" (புவியின் சாதனையாளர்) எனப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் வழங்கப் படுகிறது.
சுற்றுச்சூழல் துறையில் தடம் பதித்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப் படும் ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருது இதுவாகும்.