வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசானது வாழ்ந்து காட்டுவோம் 3.0 திட்டத்தினை நமது மாநிலம் முழுவதும் 120 தொகுதிகளில் செயல்படுத்த உள்ளது.
இது உலக வங்கியின் உதவியுடன் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இது கிராமப்புற நிறுவனங்களை ஊக்குவித்தல், நிதி அணுகல் மற்றும் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்டத் தொகுதிகளில் வேலை வாய்ப்புகளை நன்கு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.