TNPSC Thervupettagam

வாழ்வியல் தரத்திற்கான வருடாந்திர ஆய்வு

March 16 , 2019 1953 days 608 0
  • உலகளாவிய ஆலோசனை அமைப்பான மெர்சர் தனது வருடாந்திர வாழ்வியல் தர ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 231 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இது இந்த ஆய்வின் 21-வது பதிப்பாகும்.
  • உலக அளவில் மதிப்பீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 500 இடங்களுக்கான அறிக்கையில் நகரங்களுக்கிடையேயான ஒப்பீடுகள் பின்வரும் காரணிகளால் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
    • மனமகிழ் மற்றும் பொதுப் போக்குவரத்து
    • இயற்கை, பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சமூக கலாச்சாரச் சூழல்
    • பள்ளிக்கூடம் மற்றும் கல்வி
    • மருத்துவ வசதி
    • வீட்டு வசதி
  • தொடர்ந்து பத்தாவது முறையாக வியன்னா இந்த உலகப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது.
  • இந்திய நகரங்களுக்கான பட்டியலில் 105-வது இடத்தில் பட்டியலிடப்பட்டு சென்னை முதலிடத்திலும், பெங்களூரு 149 இடத்தில் பட்டியலிடப்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்