TNPSC Thervupettagam

வி-டெம் தேர்தல் ஜனநாயக அறிக்கை 2023

March 12 , 2023 495 days 351 0
  • வி-டெம் ஜனநாயக அறிக்கை நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 108வது இடத்தில் உள்ளது.
  • தான்சானியா, பொலிவியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் கீழே உள்ளது.
  • இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் முன்னணியில் உள்ள 10 தன்னாட்சி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
  • தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் (EDI) 2022 ஆம் ஆண்டில் 100வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசையானது இந்த ஆண்டு 108வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • முற்போக்கு ஜனநாயக குறியீட்டில் இந்தியா 97வது இடத்தில் இருந்தது.
  • பாகிஸ்தான் முற்போக்கு ஜனநாயகக் குறியீட்டில் 106வது இடத்திலும், தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் 110வது இடத்திலும் இரண்டு இடங்கள் கீழே சரிந்தது.
  • முற்போக்கு ஜனநாயகக் குறியீட்டில் அமெரிக்கா 23வது இடத்தைப் பிடித்த நிலையில்,  கனடா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை முறையே 24வது மற்றும் 20வது இடங்களைப் பிடித்தன.
  • முற்போக்கு ஜனநாயகக் குறியீட்டில் அதிக தொகுப்பு மதிப்பெண்களுடன் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்தது.
  • சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
  • 1998 ஆம் ஆண்டில் 74% ஆக இருந்த ஜனநாயக நாடுகளுக்கிடையேயான உலக வர்த்தகம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 47% ஆகக் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46% ஆனது தற்போது எதேச்சதிகார மற்றும் ஜனநாயக நாடுகள் தான் பங்களிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்