வி-டெம் ஜனநாயக அறிக்கை நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 108வது இடத்தில் உள்ளது.
தான்சானியா, பொலிவியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் கீழே உள்ளது.
இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் முன்னணியில் உள்ள 10 தன்னாட்சி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் (EDI) 2022 ஆம் ஆண்டில் 100வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசையானது இந்த ஆண்டு 108வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
முற்போக்கு ஜனநாயக குறியீட்டில் இந்தியா 97வது இடத்தில் இருந்தது.
பாகிஸ்தான் முற்போக்கு ஜனநாயகக் குறியீட்டில் 106வது இடத்திலும், தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் 110வது இடத்திலும் இரண்டு இடங்கள் கீழே சரிந்தது.
முற்போக்கு ஜனநாயகக் குறியீட்டில் அமெரிக்கா 23வது இடத்தைப் பிடித்த நிலையில், கனடா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை முறையே 24வது மற்றும் 20வது இடங்களைப் பிடித்தன.
முற்போக்கு ஜனநாயகக் குறியீட்டில் அதிக தொகுப்பு மதிப்பெண்களுடன் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்தது.
சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
1998 ஆம் ஆண்டில் 74% ஆக இருந்த ஜனநாயக நாடுகளுக்கிடையேயான உலக வர்த்தகம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 47% ஆகக் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46% ஆனது தற்போது எதேச்சதிகார மற்றும் ஜனநாயக நாடுகள் தான் பங்களிக்கின்றன.