இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமானது (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC), “காத்திருப்புப் பட்டியலில்” உள்ள பயணிகளுக்காக “விகல்ப்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒதுக்கீடு முறையில் பதிவு செய்தல் மற்றும் சலுகை முறையில் பதிவு செய்தல் என்ற பாகுபாடு இல்லாமல் காத்திருப்புப் பட்டியலில் உள்ள அனைத்துப் பயணிகளுக்கும் இது பொருந்தும்.
“விகல்ப்” திட்டத்தின் கீழ் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் அதிகபட்சமாக 7 மாற்று இரயில்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
பதிவு செய்யப்பட்ட இரயில் புறப்பட்ட 30 நிமிடங்கள் முதல் 72 மணி நேரங்கள் வரையில் மாற்று இரயில்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இரயில் மற்றும் காலியாகவுள்ள படுக்கை வசதி ஆகியவற்றைப் பொறுத்து காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டைப் பெற முடியும்.