TNPSC Thervupettagam

விகல்ப் திட்டம்

May 18 , 2019 2017 days 930 0
  • இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமானது (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC), “காத்திருப்புப் பட்டியலில்” உள்ள பயணிகளுக்காக “விகல்ப்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒதுக்கீடு முறையில் பதிவு செய்தல் மற்றும் சலுகை முறையில் பதிவு செய்தல் என்ற பாகுபாடு இல்லாமல் காத்திருப்புப் பட்டியலில் உள்ள அனைத்துப் பயணிகளுக்கும் இது பொருந்தும்.
  • “விகல்ப்” திட்டத்தின் கீழ் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் அதிகபட்சமாக 7 மாற்று இரயில்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • பதிவு செய்யப்பட்ட இரயில் புறப்பட்ட 30 நிமிடங்கள் முதல் 72 மணி நேரங்கள் வரையில் மாற்று இரயில்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • இரயில் மற்றும் காலியாகவுள்ள படுக்கை வசதி ஆகியவற்றைப் பொறுத்து காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டைப் பெற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்