விக்யான் தாரா என்ற புதிய முன்னெடுப்பின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) நடத்தும் பல அறிவியல் மேம்பாட்டுத் திட்டங்களை ஒன்றிணைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இளம் திறமையாளர்களை அறிவியல் ஆராய்ச்சியினை நோக்கி ஈர்க்கும் வகையில் செயல்படும் INSPIRE திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இது ஒருங்கிணைக்கிறது.
விக்யான் தாரா மூன்று பரந்த கூறுகளைக் கொண்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன மற்றும் மனித திறன் மேம்பாடு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; மற்றும்
புத்தாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயலாக்குதல்.
உயர் செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை மிக நன்கு ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைக்கான உயிரி தொழில்நுட்பக் கொள்கைக்கு (Bio E3) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Bio E3 கொள்கையானது, மிகவும் நிலையான, புதுமையான மற்றும் உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான எதிர்காலத்தினை ஊக்குவிக்கும்.