இஸ்ரோ அமைப்பு மற்றும் சண்டிகரில் உள்ள குறைக்கடத்தி ஆய்வகம் (SCL) ஆகிய இரண்டும் இணைந்து விண்வெளித் திட்டப் பயன்பாடுகளுக்காக என பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட இரண்டு அதிநவீன 32-பிட் நுண்செயலிகளை உருவாக்கியுள்ளன.
விக்ரம் 3201 என்பது முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது 32-பிட் நுண்செயலி ஆகும் என்பதோடு இது ஏவுகணை வாகனங்களின் ஏவுதலின் போதான கடுமையான சூழ்நிலைகளில் பயன்படுத்த தகுதியுடையது.
கல்பனா 3201 ஆனது, திறந்த மூல மென்பொருள் கருவிகளுடன் இணங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு அது பறக்கும் கலன்களின் மென்பொருளுடன் இணங்கி இயங்குகின்றதா இல்லையா என்றும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.