TNPSC Thervupettagam

விக்ரம் சாரா பாய் 100வது பிறந்த தினம்

August 13 , 2019 1812 days 790 0
  • கூகுள் நிறுவனமானது ஆகஸ்ட் 12 அன்று விஞ்ஞானி  மற்றும் கண்டுபிடிப்பாளரான விக்ரம் சாரா பாயின் 100வது பிறந்த தினத்தை கூகுள் டூடுளுடன் அனுசரித்தது.
  • அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்திற்கு அருகே இறுதியாகத் தரையிறங்கும் நிலவுத் திட்டமான சந்திரயான்-IIல் உள்ள தரையிறங்கும் வாகனமானது விக்ரம் என்று பெயரிடப்பட்டு இருக்கின்றது.
  • இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாக கருதப்படுகின்றார்.
  • இவர் 1966 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளார். இவர் இறந்த பின்பு 1972 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1973 ஆம் ஆண்டில் இவருடைய நினைவாக நிலவில் உள்ள ஒரு பள்ளத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது.
  • இந்திய செயற்கைக் கோள்களை தயாரிக்க மற்றும் ஏவுவதற்கான ஒரு திட்டத்தை சாராபாய் தொடங்கினார்.
  • இதன் விளைவாக, முதலாவது இந்திய செயற்கைக் கோளான ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டில் இரஷ்ய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு, சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • இவர் 1963-ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார்.
  • மேலும் இவர் விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவராகப் (1963 – 1971) பணியாற்றினார்.
  • இவரால் தொடங்கப்பட்ட இதர நிறுவனங்கள்

1947 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்.

1962 ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட இந்திய தேசியக் குழு.

1963 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்ட தும்பா நிலநடுக்கோட்டு விண்கல ஏவுதளம்.

1961 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம்

1960 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் சமுதாய அறிவியல் மையம்

1949 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நிகழ்த்துக் கலைகளுக்கான தர்பன் நிறுவனம்

இவர்  வகித்த தனித்துவமிக்க பதவிகள்
  • இந்திய அறிவியல் காங்கிரசில் இயற்பியல் பிரிவின் தலைவர், (1962).
  • வியன்னாவில் உள்ள IAEAயின் (சர்வதேச அணுசக்தி ஆணையம்/International Atomic Energy Agency) பொது மாநாட்டின் தலைவர் (1970).
  • இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் (1966 –1971).
  • 'அணுசக்தியின் அமைதியான பயன்பாடுகள்' பற்றிய ஐ.நா.வின் நான்காவது மாநாடு (1971) - துணைத் தலைவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்