குஜராத் மாநில அரசானது விக்ரம் சாராபாய் குழந்தைகள் புத்தாக்க மையத்தை அமைக்க உள்ளது.
இந்த மையமானது மாநிலத்தில் உள்ள 18 வயது வரையிலான குழந்தைகளின் கண்டுபிடிப்புகளை அடையாளம் காண்பதையும், அவர்களின் முயற்சிகளை வளர்ப்பதையும், ஊக்குவிப்பதையும் நோக்கமாக உள்ளது.
இந்தப் புத்தாக்க மையமானது குஜராத் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மையத்தின் கீழ் செயல்பட உள்ளது.
இது குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர கால நிதியம் (யுனிசெஃப்) ஆகியவற்றின் ஒரு கூட்டு முன்னெடுப்பு ஆகும்.