திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தின் (Space Physics Laboratory - SPL) விஞ்ஞானிகள் சந்திரயான் 2இன் விக்ரம் என்ற பெயர் கொண்ட லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சந்திரயன் 2ல் மொத்தம் உள்ள 14 விண்வெளி ஆய்வுக் கருவிகளில் நான்கு விண்வெளி ஆய்வுக் கருவிகள் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவையாகும்.
இதுபற்றி
SPL என்பது விக்ரம் சாரபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் முதன்மை அறிவியல் ஆய்வகமாகும்.
இது புவியின் வளிமண்டலத்தின் கீழ் மற்றும் மேல் அடுக்கு, அயன மண்டலங்கள் & காந்த மண்டலங்கள் மற்றும் பிற சூரிய மண்டல அமைப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது.