ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையம் ஆனது, விங்ஸ் இந்தியா 2024 என்ற விமானக் காட்சியை நடத்த உள்ளது.
இது பொது விமான போக்குவரத்து அமைச்சகம் (MOCA) மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு நாட்கள் அளவிலான இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காட்சியானது அதிநவீன விமானத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் காட்சி நிகழ்வாகத் திகழும்.
போயிங் நிறுவனத்தின் புதிய பெரிய 777-9 ஜெட் விமானமானது, இந்த நிகழ்விற்காக முதல்முறையாக இந்தியா வர உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனமானது, 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விமானக் “கொள் முதலின்” ஒரு பகுதியாக, பத்து 777-9 விமானங்களைப் பெற உள்ளது.