TNPSC Thervupettagam

விசா பொது மன்னிப்பு திட்டம் - ஐக்கிய அரபு அமீரகம்

August 4 , 2018 2209 days 606 0
  • ஐக்கிய அரசு அமீரகம் (United Arab Emirates - UAE) நூற்றுக்கணக்கான சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள் பயனடையும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று மாத விசா பொது மன்னிப்புத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
  • இத்திட்டம் தங்களது பணிக்காலம் முடிந்த பின்பும் அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு பயனளிப்பதோடு அவர்கள் எவ்வித அபராதங்களும் செலுத்தாமல் தாய்நாட்டிற்கு திரும்பவும் மேலும் 6 மாதங்கள் கூடுதலாக அங்கு தங்கியிருந்து வேறு வேலை தேடிக் கொள்ளவும் வழி வகை செய்கின்றது.
  • அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையமானது UAE நாட்டில் வெளிநாட்டவர்களின் உறைவிடம் மற்றும் உள்நுழைவு அனுமதி ஆகியவற்றுக்கு பொறுப்பான ஒரு நிறுவனமாகும்.
  • UAE தமது நாட்டிலேயே அதிக அளவு எண்ணிக்கை கொண்ட புலம் பெயர்ந்த சமூகமான8 மில்லியன் இந்தியர்களுக்கு புகலிடமாக உள்ளது.
  • இப்பத்தாண்டுகளில் இத்திட்டம் UAE அரசாங்கம் அறிவிக்கும் மூன்றாவது பொதுமன்னிப்புத் திட்டமாகும். இத்திட்டம் அக்டோபர் 31 அன்றுடன் முடிவடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்