TNPSC Thervupettagam

விசைப் பலகை அழுத்தங்களின் ஒலிசார் அலைவரிசை அடிப்படையிலான தாக்குதல்

August 27 , 2023 457 days 268 0
  • சமீபத்திய அறிக்கையானது, விசைப்பலகையின் பல அழுத்தங்களால் உருவாகும் ஒரு ஒலியைப் பகுப்பாய்வு செய்து கடவுச் சொற்களைக் கண்டறிவதற்குச் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்த முடியும் என்று வெளிக் கொணர்ந்துள்ளது.
  • இந்த நுட்பமானது, எந்த எழுத்துக்கள் அழுத்தப்படுகின்றன என்பதை அறிவதற்காக விசைப் பலகையில் தட்டச்சு செய்வதால் உருவாகும் ஒலிகளைப் பயன்படுத்துகிறது.
  • இந்த தனித்துவமான ஒலிகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், கணினி நிரல்களில் ஊடுறுவோர் சரியான கருவிகளைக் கொண்டு, மக்கள் தட்டச்சு செய்யும் சில துல்லியமான எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கண்டறிய முடியும்.
  • முக்கியச் செயல்முறையின் பக்க விளைவுத் தாக்குதல்கள் (Side Channel attacks) என்பது குறியாக்க முறையில் பயன்படுத்தப்படும் துணை அமைப்புகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் குறியாக்கவியல் வழிமுறையை ஊடுருவச் செய்யும் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்