TNPSC Thervupettagam

விஜயகரிசல்குளம் அகழாய்வு

November 11 , 2024 11 days 124 0
  • விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது நகைகள் மற்றும் வேட்டையாடும் கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 6000 ஆண்டுகள் பழமையான கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டைக்கு அருகில் அமைந்து உள்ளது.
  • சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சில பொருட்களில் பொதுவாகப் பழங்கால நகைகள் தயாரிப்பதில் பயன்படுத்தப் படுகின்ற ஜாஸ்பர் (சூரியகாந்தக்கல்) மற்றும் சார்ட் வகை கற்கள் ஆகியவையும் அடங்கும்.
  • தங்கம் மற்றும் செப்பு நாணயங்கள், உடைந்த சுடுமண்பாண்டச் சிலைகள், சதுரங்க விளையாட்டுக் காய்கள், கண்ணாடி மணிகள் மற்றும் வட்ட சில்லைகள் உட்பட சுமார் 2,800க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் இது வரை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்