சென்னை எண்ணூரின் காட்டுப்பள்ளியிலுள்ள கப்பல் கட்டுந்தளத்தில் இந்திய கடலோரக் காவற்படைக்காக லார்சன் & டூப்ரோ எனும் தனியார் நிறுவனத்தால் உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட இரண்டாவது கடலோர காவற் ரோந்து கப்பலான “விஜயா” கப்பல் கடலோர காவற்படையில் செயல்படத் துவங்கியுள்ளது.
இக்கப்பலில் உள்ள வழிகாட்டு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களானது வெப்ப மண்டல சீதோஷணங்களிலும் செயல்பட வல்லது.
நடப்பு நிலை தொழிற்நுட்ப வசதிகளினால் தயாரிக்கப்பட்ட ரேடாரும், வழிகாட்டு மற்றும் தொழிற்நுட்ப அமைப்புகளும் கொண்ட இந்த கப்பலானது பகல் மற்றும் இரவு என அனைத்து நேரத்திலும் ரோந்து மற்றும் கண்காணிப்பிற்கும், கடலோர பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கை போன்ற பல செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் இதற்கு முன் கட்டப்பட்ட முதலாவது கப்பலான “விக்ரம்” எனும் கடலோர ரோந்துக் கப்பலே தனியார் கப்பல் கட்டுந்தளத்தில் கட்டப்பட்ட நாட்டின் முதல் பாதுகாப்புக் கப்பலாகும்.