இந்த ஒன்பது பேர் கொண்ட குழுவானது, சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயல்பாடு குறித்த குறைகளை நிவர்த்தி செய்யும் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பங்கு ஆனது, முன்மாதிரிகள் அல்லது தொழில்நுட்ப செயல்விளக்கங்களை உருவாக்குவது சாராமல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மட்டுமே மேற்கொள்வதாகும்.
மேலும், எந்தவொரு நுட்பத்தினை உருவாக்குதல் மற்றும் அதனை மேற்கொண்டு மேம்படுத்துதல் போன்ற பணியானது சில தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாடு முழுவதும் தற்போதுள்ள 40 அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகங்களுக்குப் பதிலாக, 10 தேசிய அளவிலான ஆய்வக மையங்களை அமைக்க இக்குழு பரிந்துரைத்துள்ளது.
இது தவிர, தனியார் துறை நிறுவனங்கள் தங்களது ஆயுத அமைப்புகளை பரிசோதித்துப் பார்ப்பதற்காக ஐந்து தேசிய சோதனை மையங்களை அமைக்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தொடர்பான வரையறுக்கப்பட்ட பொது விழிப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மை ஆனது எதிர்மறையான கருத்து மற்றும் விமர்சனத்திற்கு வழி வகுக்கிறது.
மாபெரும் அளவிலான உற்பத்திக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிலிருந்து தனியார் துறை தொழிற்சாலைகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களைத் திறன் மிக்க முறையில் பரிமாற்றவும் பரிந்துரைக்கப் பட்டு உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையை உருவாக்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.