இந்தியக் கடற்படை பாதுகாப்புக் கப்பலான “விஜித்” இந்தோனேசியாவின் சபங்கிற்கு வருகை புரிந்த முதலாவது கடற்படைப் பாதுகாப்புக் கப்பலாக உருவெடுத்துள்ளது.
இது இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான மிக நெருக்கமான கடல்சார் உறவையும் கடல்சார் பாதுகாப்புப் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் எடுத்துக் காட்டுகிறது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சபங்கிற்கு முதன்முறையாக வருகை புரிந்த கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவைத் தொடர்ந்து கடற்படைப் பாதுகாப்புக் கப்பலின் இந்த வருகை நிகழ்ந்துள்ளது.