TNPSC Thervupettagam

விண்கல் மோதலால் உருவான லூனா பள்ளம்

May 3 , 2024 204 days 286 0
  • நாசாவின் லேண்ட்சாட் 8 செயற்கைக் கோள் ஆனது, இந்தியாவின் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 6,900 ஆண்டுகள் பழமையான மோதலால் ஏற்பட்ட பள்ளத்தின் திகைப்பூட்டும் படங்களைப் படம் பிடித்துள்ளது.
  • அதன் புவி வேதியியல் பகுப்பாய்வானது "இது ஒரு விண்கல் தாக்கத்தின் சிறப்பியல்பு அடையாளங்களைக் கொண்டுள்ளது" என்பதைக் கண்டறிந்தது.
  • இந்தப் பள்ளத்திற்கு, அருகிலுள்ள கிராமத்தின் பெயரால் இது லூனா என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது அறிவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ள ஒரு புவியியல் அதிசயமாகும்.
  • தோராயமாக 1.8 கிலோமீட்டர் விட்டம் கொண்ட லூனா பள்ளத்தின் வெளிப்புற விளிம்பு ஆடன்கு பள்ளத்தின் தரைப்பகுதியிலிருந்து சுமார் 20 அடி உயரத்தில் உள்ளது.
  • இந்தப் பள்ளத்தில் உள்ள மண்ணில் காணப்படும் தாவர எச்சங்களின் கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு ஆனது, விண்கல் தாக்கம் சுமார் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது என்பதை தீர்மானிக்க அறிவியலாளர்களுக்கு உதவியது.
  • லூனா பள்ளம் ஹரப்பா குடியேற்றத்தின் ஒரு பழங்கால எஞ்சியப் பகுதிக்கு அருகில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்