TNPSC Thervupettagam

விண்ட்ஹாம் – கேம்ப்பெல் விருது

March 21 , 2019 1958 days 531 0
  • பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளரான ரகு கர்னாட், தான் எழுதி வெளியிட்ட புத்தகத்திற்காக “புனைவு அற்ற கதைகள்” என்ற பிரிவில் விண்ட்ஹாம் - கேம்ப்பெல் என்ற விருதை வென்றுள்ளார்.
  • இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் “தொலைதூர அரங்கு : இரண்டாம் உலகப் போரின் ஒரு இந்தியக் கதை” என்பதாகும்.
  • இந்த ஆண்டிற்கான, புனைவு, புனைவற்ற, நாடகம் மற்றும் கவிதை ஆகிய 4 பிரிவுகளில் வெற்றி பெற்ற 8 வெற்றியாளர்களில் கர்னாடும் ஒருவராவர்.
  • இந்தப் புகழ்பெற்ற விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் கர்நாட் ஆவார்.
  • ஜெரி பிண்டோ என்பவர் “எம் அண்ட் தி பிக் ஹூம்” என்ற தனது நாவலுக்காக 2016 ஆம் ஆண்டில் இவ்விருதை வென்றுள்ளார்.

விண்ட்ஹாம் – கேம்ப்பெல் விருது

  • விண்ட்ஹாம் – கேம்ப்பெல் விருதானது பெய்னெக் ரேர் புக் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதி நூலகம் ஆகியவற்றினால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்விருதானது 2013 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • எழுத்தாளர் டொனால்டு விண்ட்ஹாமின் மனைவியான சாண்டி மேப்பெல் என்பவரின் நினைவாக இவ்விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்