விண்மீன்களுக்கு நடுவே உள்ள இரண்டாவது பொருள் – 2I/போரிசோவ்
September 30 , 2019 1885 days 678 0
சர்வதேச வானியல் சங்கத்தின்படி (International Astronomical Union - IAU), விண்மீன்களுக்கு நடுவே உள்ள ஒரு இரண்டாவது பொருள் என்ற வகையில் 2I/போரிசோவ் எனப் பெயரிடப்பட்ட ஒரு பொருள் சூரியக் குடும்பத்தில் கண்டறியப் பட்டிருக்கின்றது.
இது கிரீமியாவின் மார்கோ கண்காணிப்பு ஆய்வகத்திலிருந்து வானியல் நிபுணரான கென்னடி போரிசோவ் என்பவரால் கண்டறியப்பட்டதாகும்.
இது அவராலேயே தயாரிக்கப்பட்ட 0.65 மீட்டர் அளவுடைய ஒரு தொலை நோக்கியிலிருந்து கண்டறியப்பட்ட ஒரு வால் நட்சத்திரத்தைப் போல் உள்ளது.
இது ஒரு பெரிதுபடுத்தப்பட்ட வட்டப் பாதையை தனது சுற்றுப் பாதையாக கொண்டிருக்கின்றது.
இது முன்னதாக C/2019 Q4 என அறியப்பட்டதாகும்.
விண்மீன்களுக்கு நடுவேயான முதலாவது பொருள் 1I/ஒமுவாமுவாஎன்பதாகும்.
விண்மீன்களுக்கு நடுவில் உள்ள ஒரு பொருள் என்பது குறுங்கோள், வால் நட்சத்திரம் அல்லது கிரகம் போன்ற ஒரு வானியல் பொருளாகும். ஆனால் இது கண்டிப்பாக விண்மீன்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் நட்சத்திரத்தைப் போன்றோ அல்லது துணை நட்சத்திரத்தைப் போன்றோ இருக்காது.