வெளிப்புற விண்வெளி உடன்படிக்கை ஒரு சர்வதேச விண்வெளிச் சட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. இது 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வந்தது.
இந்த ஆண்டு அதன் 50 வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.
இந்தியா உட்பட இந்த உடன்படிக்கையில் 107 நாடுகள் உள்ளன.
இதன் உறுப்பு நாடுகள் சந்திரனிலோ மற்றும் வேறு எந்த கிரகத்திலோ, பூமியின் சுற்றுப்பாதையிலோ பேரழிவு ஆயுதங்கள் வைப்பதைத் தடை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமாதான நோக்கங்களுக்காக விண்வெளி ஆராய்ச்சியைப் பயன்படுத்த நாடுகளை நாடுவதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தம் பாரம்பரியமான ஆயுதங்களைச் சுற்றுப்பாதையில் வைக்கப்படுவதை தடைசெய்யாது. இதனால் இயக்கவியல் குண்டுவெடிப்பு போன்ற மிக அதிக அழிவுகரமான தாக்குதல் உத்திகள் இன்னும் சாத்தியமானவையாகும்.