TNPSC Thervupettagam

விண்வெளி குப்பைகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டுறவு

January 5 , 2025 7 days 98 0
  • ஜப்பான் மற்றும் இந்தியாவில் உள்ள விண்வெளி சார் புத்தொழில் நிறுவனங்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு சீரொளிக் கற்றைப் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவது குறித்த கூட்டு ஆவிற்கு ஆய்விற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
  • இது சுற்றுப்பாதையில் உள்ள மாபெரும் அளவிலான குப்பைத் திரள் பிரச்சனைக்கு ஒரு சோதனை சார் அணுகுமுறையாகும்.
  • டோக்கியோவைச் சேர்ந்த ஆர்பிட்டல் லேசர்ஸ் மற்றும் இந்திய நாட்டின் ரோபோடிக்ஸ் நிறுவனமான இன்ஸ்பெசிட்டி ஆகியவை விண்வெளி சார் சேவைகளுக்கான வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யும்.
  • செயலிழந்த செயற்கைக்கோளை விண்வெளிச் சுற்றுப்பாதையில் இருந்து நீக்குவதும், விண்கலத்தின் ஆயுளை நீட்டிப்பதும் இதில் அடங்கும்.
  • ஆர்பிட்டல் லேசர்ஸ் நிறுவனமானது, இந்தப் புதிய அமைப்பை விண்வெளியில் செயல் விளக்கி 2027 ஆம் ஆண்டிற்குப் பிறகு சேவை வழங்கீட்டு அமைப்புகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
  • ஆர்பிட்டல் லேசர்ஸ் நிறுவனமானது, விண்வெளிக் குப்பைகளின் மேற்பரப்பின் சிறிய பகுதிகளை ஆவியாக்குவதன் மூலம் விண்வெளி குப்பைகளின் சுழற்சியை நிறுத்த சீரொளிக் கற்றை ஆற்றலைப் பயன்படுத்தும் அமைப்பை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்