TNPSC Thervupettagam

விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச்

January 1 , 2020 1792 days 792 0
  • நாசாவில் (தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம்) பணியாற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச் என்பவர் ஒரு பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட ஒரே விண்வெளிப் பயணத்தின் போது நீண்ட நாட்கள் அங்கு தங்கியதற்கான சாதனையை உருவாக்கியுள்ளார்.
  • 2016 - 2017 ஆம் ஆண்டில் முன்னாள் விண்வெளி நிலையத் தளபதியான பெக்கி விட்சன் என்பவர் 288 நாட்கள் அங்கு தங்கி இருந்தார். இச்சாதனையை கிறிஸ்டினா கோச் முறியடித்துள்ளார்.
  • இவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) உள்ளார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு திரும்பும் நேரத்தில் 300 நாட்களுக்கு மேல் விண்வெளியில் கழித்திருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்