TNPSC Thervupettagam

விண்வெளிக்குப் பயணிக்கும் இரண்டாவது இந்திய வம்சாவளிப் பெண்

July 6 , 2021 1116 days 530 0
  • ஸ்ரீசா பந்த்லா ஜூலை 11 அன்று ரிச்சர்டு பிரான்சன் என்பவருடன் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளார்.
  • ரிச்சர்டு பிரான்சன் விர்ஜின் கேலக்டிக் என்ற நிறுவனத்தின் நிறுவனராவார்.
  • பந்த்லா ‘யுனிட்டி22’ என்ற திட்டத்தின் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வார்.
  • இவர் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் ‘VSS யுனிட்டிஎன்ற கலத்தில் பயணிக்கும் ஆறு விண்வெளி வீரர்களுள் ஒருவராவார்.
  • ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீசா பந்த்லா ஹவுஸ்டனில் வளர்ந்தவராவார்.
  • கல்பனா சாவ்லா அவர்களை அடுத்து விண்வெளிக்குப் பயணிக்கும் இந்தியாவில் பிறந்த இரண்டாவது பெண்மணி எனும் பெருமையை இவர் பெற உள்ளார்.
  • பந்த்லாவிற்கு முன்பாக விண்வெளிக்குப் பயணித்த மற்ற இந்தியர்கள் ராகேஷ் சர்மா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோராவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்