TNPSC Thervupettagam

விண்வெளித் திட்டங்களுக்கான நிதி

September 25 , 2024 61 days 120 0
  • எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இஸ்ரோவின் பின்வரும் நான்கு மிக முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:
    • இந்தியாவின் நிலவு ஆய்வுத் திட்டமான சந்திரயான்-4;
    • வெள்ளிக் கிரகச் சுற்றுக் கல ஆய்வுத் திட்ட (VOM) உருவாக்கம்;
    • பாரதிய அந்த்ரிக்ஸ் நிலையம் (BAS) மற்றும்
    • அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த ஏவு வாகனத்தின் (NGLV) உருவாக்கம்.
  • மொத்தத்தில், இந்த நான்கு திட்டங்களின் மேம்பாட்டுச் செலவுகளுக்காக 22,750 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
  • வெள்ளிக் கிரகச் சுற்றுக் கல ஆய்வுத் திட்டமானது, வெள்ளிக் கோளின் வளிமண்டலம் மற்றும் புவியியலை அறிவியலாளர்கள் நன்கு புரிந்து கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதல் அறிவியல் ஆய்வுப் பயணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்