TNPSC Thervupettagam

விண்வெளித் தொழில் குப்பைகளைக் குறைப்பதற்கானப் பரிந்துரைகள்

July 25 , 2023 361 days 198 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஆகியவை இணைந்து விண்வெளித் தொழில் குப்பைகளைக் குறைப்பதற்காக என்று பரிந்துரைகளை வெளியிட்டுள்ளன.
  • இது விண்வெளிக் குப்பைகள் தொடர்பான ஒரு சிக்கலைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விண்கலத்தினை இயக்கும் அந்த நிறுவனங்கள் ஆய்வுப் பணி நிறைவடைந்து சுமார் 5 ஆண்டுகளுக்குள் புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் இருந்து அந்தச் செயற்கைக் கோள்களை அகற்ற முயற்சிக்க வேண்டும்.
  • 375 கிலோமீட்டர் உயரத்திற்கு மேல் சுற்றும் விண்கலங்கள் சுற்றுப்பாதையில் சரியான முறையில் இயங்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த வழிகாட்டுதல்கள் மிக உந்துவிசை அடிப்படையிலான ஒரு ஏவுதல் அமைப்பைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றன, ஆனாலும் இதில் மற்றபிற தொழில்நுட்பங்கள் சூழ்நிலையைப் பொறுத்து மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
  • மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பீட்டு நிறுவனங்கள் நிலையான நீடித்த ஆய்வுப் பணிகளுக்கான ஊக்கத் தொகைகள் வழங்கும் ஒரு அம்சத்தினைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு, மேலும் பொருத்தமானப் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல் படுத்தப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • சுற்றுப்பாதையில் உள்ள பல்வேறு பொருட்களின்-எண்ணிக்கை, பரிணாமம் மற்றும் அவற்றுக்கிடையேயானத் தொடர்பு ஆகியவற்றை மேலும் ஆய்வு செய்ய இது தொழில் துறை நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
  • 7000க்கும் மேற்பட்ட விண்வெளியில் மிதக்கும் ஏவூர்தி பாகங்களின் உரிமையாளரான ரஷ்யா அதிக விண்வெளிக் குப்பைகள் கொண்ட நாடாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்