விண்வெளியில் இஸ்ரோவின் மிகச்சிறிய ஏவுகலம்
August 8 , 2022
844 days
624
- இஸ்ரோ தனது சிறிய வணிக ஏவுகலமான ‘சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை (SSLV) விண்ணில் ஏவியது.
- SSLV ஏவுகலத்தினால் 500 கிலோ எடை கொண்ட விண்வெளிப் பொருட்களை 500 கிமீ தொலைவு வரை உள்ள கோள்களின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்த முடியும்.
- ஆனால் பெரிய ஏவு கலங்களைப் போலல்லாமல், SSLV குறுகிய, சிறிய அல்லது நுண்ணிய அளவிலான செயற்கைக் கோள்களையும் (10 முதல் 500 கிலோ எடை) கொண்டு செல்ல முடியும்.
- SSLV ஏவுகலங்களை ஒரு பதினைந்து நாட்களுக்குள் ஒன்றிணைத்துவிட முடியும்.
- இது தனது முதல் பயணத்தில் இரண்டு விண்வெளிப் பொருட்களை விண்ணை நோக்கி ஏற்றிச் சென்றது.
- முதலாவதாக, EOS-02 என்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு புவி கண்காணிப்பு செயற்கைக் கோளினை இது ஏற்றிச் சென்றது.
- இது அகச்சிவப்பு அலைநீளத்தினுள் அதிக இடஞ்சார்ந்த தெளிவுத்திறனுடன் மேம்பட்ட ஒளியியல் தொலை உணர்வுச் செயல்பாடுகளை வழங்கும்.
- இரண்டாவது விண்வெளியில் மூவர்ணக் கொடியை பறக்க விடும் ஒரு நோக்கத்துடன் அனுப்பப் பட்ட ‘AzaadiSAT’ செயற்கைக் கோள் ஆகும்.
- இது 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக குறிப்பாக கருத்தாக்கப்பட்டு ஏவப் பட்டது.
- AzaadiSAT செயற்கைக் கோளானது 75 விண்வெளிப் பொருட்களைக் கொண்டுள்ளது.
- இந்தியாவின் 75 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 இளம் பெண் மாணவர்களால் இந்த விண்வெளிப் பொருட்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
- இது 8 கிலோ எடையுள்ள கன சதுர வடிவ (கியூப்சாட்) செயற்கைக் கோளாகும்.
- தகவல் தொடர்பினைப் பெறுவதில் ஏற்பட்ட ஒரு துண்டிப்பு காரணமாக இத்திட்டம் தோல்வியடைந்தது.
Post Views:
624