TNPSC Thervupettagam

விண்வெளியில் உள்ள பொருட்களுக்குப் பெயரிடல்

September 1 , 2023 323 days 210 0
  • இந்திய அரசானது, சந்திரயான்-3 தரையிறங்கு கலம் நிலவினைத் தொட்டப் பகுதிக்கு சிவசக்தி என்று பெயரிட்டுள்ளது.
  • நிலவானது எந்த ஒரு நாட்டின் அதிகார வரம்பிற்குள்ளும் உட்படாது.
  • ஆனால், சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஆனது விண்வெளி நடவடிக்கைகளுக்காக வேறு சில விதிகளை நிர்ணயிக்கிறது.
  • சர்வதேச வானியல் ஒன்றியமானது 1919 ஆம் ஆண்டில் அது தொடங்கப் பட்டதிலிருந்து கோள்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் பெயரிடலின் நடுவண் அமைப்பாக இருந்து வருவதோடு, மேலும் அதன் 92 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • பல ஆய்வுத் தளங்களுக்கு முதன்முதலில் முறைசாரா வகையில் பெயர்கள் வழங்கப் படுகின்றன.
  • இந்தப் பெயர்கள் பின்னர் அதன் ஒப்புதலுக்காக சர்வதேச வானியல் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப் படுகின்றன.
  • சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பணிக் குழு இந்தப் பெயரிடல் செயல் முறையைக் கையாளுகிறது.
  • இந்த அமைப்பின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் எந்தவொரு தேசிய அரசு அல்லது சர்வதேசச் சட்டத்தினாலும் செயல்படுத்தப்பட முடியாதவை ஆகும்.
  • கோள்கள் அமைப்பின் பெயரிடல் அமைப்பினுடைய பணிக் குழுவினுடைய (WGPSN) உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலம் வெற்றிகரமாக மதிப்பிடப்பட்டப் பிறகு, இந்தப் பெயர்கள் அதிகாரப் பூர்வ ரீதியில் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பெயரிடலாக அங்கீகரிக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது.
  • அதன் பிறகே வரைபடங்கள் மற்றும் அறிக்கை வெளியீடுகளில் இந்தப் பெயர்களைப் பயன்படுத்த இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்