இந்திய அரசானது, சந்திரயான்-3 தரையிறங்கு கலம் நிலவினைத் தொட்டப் பகுதிக்கு சிவசக்தி என்று பெயரிட்டுள்ளது.
நிலவானது எந்த ஒரு நாட்டின் அதிகார வரம்பிற்குள்ளும் உட்படாது.
ஆனால், சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஆனது விண்வெளி நடவடிக்கைகளுக்காக வேறு சில விதிகளை நிர்ணயிக்கிறது.
சர்வதேச வானியல் ஒன்றியமானது 1919 ஆம் ஆண்டில் அது தொடங்கப் பட்டதிலிருந்து கோள்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் பெயரிடலின் நடுவண் அமைப்பாக இருந்து வருவதோடு, மேலும் அதன் 92 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
பல ஆய்வுத் தளங்களுக்கு முதன்முதலில் முறைசாரா வகையில் பெயர்கள் வழங்கப் படுகின்றன.
இந்தப் பெயர்கள் பின்னர் அதன் ஒப்புதலுக்காக சர்வதேச வானியல் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப் படுகின்றன.
சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பணிக் குழு இந்தப் பெயரிடல் செயல் முறையைக் கையாளுகிறது.
இந்த அமைப்பின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் எந்தவொரு தேசிய அரசு அல்லது சர்வதேசச் சட்டத்தினாலும் செயல்படுத்தப்பட முடியாதவை ஆகும்.
கோள்கள் அமைப்பின் பெயரிடல் அமைப்பினுடைய பணிக் குழுவினுடைய (WGPSN) உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலம் வெற்றிகரமாக மதிப்பிடப்பட்டப் பிறகு, இந்தப் பெயர்கள் அதிகாரப் பூர்வ ரீதியில் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பெயரிடலாக அங்கீகரிக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது.
அதன் பிறகே வரைபடங்கள் மற்றும் அறிக்கை வெளியீடுகளில் இந்தப் பெயர்களைப் பயன்படுத்த இயலும்.