சீன அறிவியலாளர்கள், சீன விண்வெளி நிலையத்தில் மூடியிடப்பட்டப் பெட்டகத்தின் உள்ளே ஒரு நீர்வாழ் சூழலை வெற்றிகரமாகப் பேணியுள்ளனர்.
ஷென்சுவோ-18 ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியான இந்தப் பரிசோதனையானது விண்வெளி சூழலியல் சோதனைகளில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
விண்வெளியின் சவாலான ஒரு சூழலில் நீர்வாழ் உயிரினங்கள் எவ்வாறு உயிர் வாழ முடியும் என்பதைப் புரிந்து கொள்வதில் இந்தச் சாதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறிக்கிறது.