இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது “விண்வெளியில் மனிதர்கள் கொள்கை – 2021” என்ற கொள்கையின் ஒரு வரைவை வெளியிட்டுள்ளது.
இது விண்வெளி நடவடிக்கையில் வழக்கமாக ஈடுபடும் நிறுவனங்கள் அல்லாத நிறுவனங்கள் பங்கேற்க வழிவகை செய்கின்றது.
மேலும் இது தனது மனித விண்வெளித் திட்டத்திற்கான தொழில்நுட்பங்களைக் கட்டமைப்பதற்காக உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் புதிய தொழில் தொடக்க நிறுவனங்களை ஈர்க்கவும் திட்டமிடுகின்றது.