TNPSC Thervupettagam

விண்வெளியில் முதலாவது அரேபியர்

September 26 , 2019 1794 days 722 0
  • கஜகஸ்தானின் பைக்கோனூர் விண்வெளி மையத்திலிருந்து ஒரு சோயுஸ் விண்கலமானது ஒரு அமீரக விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station - ISS) சுமந்து சென்றது.
  • அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதலாவது அரேபியராக சாதனை படைக்க இருக்கின்றார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹஸ்ஸா அல் – மன்சூரி என்பவர் தனது விண்கலத்தில் ரஷ்யாவின் ஒலெக் ஸ்க்ரிபோச்ச்கா மற்றும் நாசா விண்வெளி வீரர் ஜெசிகா மீர் ஆகியோருடன் இணைந்து ISSக்குச் சென்றுள்ளார்.
  • ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு ISS ஒரு அரிய எடுத்துக்காட்டு ஆகும்.
  • ISS 1998 ஆம் ஆண்டு முதல் ஒரு மணி நேரத்திற்குச்  சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் (17,000 மைல்) பூமியைச் சுற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்