மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வெளியுறவு பிரச்சாரம் மற்றும் பொதுத் தூதரகப் பிரிவானது (External Publicity and Public Diplomacy Division) தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் விதேஷ் ஆயா பிரதேஷ் கேத்வார் (Videsh Aaya Pradesh ke Dwaar’) எனும் பிராந்திய ஊடகங்களுடனான பங்கேற்புத் திட்டத்தை துவங்கியுள்ளது.
நாட்டினுடைய வெளியுறவுக் கொள்கைகளில் (foreign policy) ஆர்வமுடைய ஊடக தொழிற்முறை வல்லுநர்களின் (Media Professionals) குழுவை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
எளிமையான முறையில் அரசினுடைய வெளியுறவுக் கொள்கைகளின் முன்னுரிமைகளை (foreign policy priorities) தெரிவிப்பதற்கு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள பிராந்திய ஊடகங்களுடன் (regional media) மத்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் பங்கெடுப்பை ஈடுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொது இராஜ்ஜிய ரீதியின் அடைவை (public diplomacy outreach) மேம்படுத்துவதும், சமுதாயத்தின் அடி நிலையில் உள்ள மக்களிடம் அரசினுடைய வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்களை (objectives of foreign policy) கொண்டு செல்வதற்கான மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொறுப்புடைமையை மேம்படுத்துவதும் இதன் நோக்கங்களாகும்.