வித்தியாசமான புதிய உலோகம் கண்டுபிடிப்பு
January 18 , 2022
951 days
521
- அறிவியலாளர்கள் சமீபத்தில் ஒரு புதிய உலோகக் குழுவைக் கண்டுபிடித்துள்ளனர்.
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த உலோகக் குழுவானது "விசித்திரமான புதிய உலோகங்களின் குழு" (New Strange group of metals) என்று அழைக்கப்படுகிறது.
- இந்தப் புதிய உலோகக் குழுவின் பண்புகள் இன்னும் புரிந்து கொள்ளப் படவில்லை.
- இந்த விசித்திரமான உலோகங்கள் ஃபெர்மி அல்லாத திரவங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.
- இவை உலோகங்களின் மரபு விதிகளைப் பின்பற்றுவதில்லை.
- இவற்றின் பண்பானது, முதன்முதலில் குப்ரேட்டுகளில் (cuprates), அதாவது காப்பர் ஆக்சைடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த குப்ரேட்டுகள் உயர் வெப்பநிலை மீக்கடத்திகள் ஆகும்.
- இந்த உலோகங்கள் உலோகங்களின் மின் கடத்துத் திறனைக் கொண்டிருப்பதில்லை.
Post Views:
521