TNPSC Thervupettagam

வினாத்தாள் வெளியாதல் தடுப்புச் சட்டம்

June 27 , 2024 153 days 244 0
  • சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வினாத்தாள் வெளியாதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • கணினி அடிப்படையிலான தேர்வுகளுக்கான விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தயாரிக்க தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனத்திற்கு (NRA) வலியுறுத்தப் பட்டுள்ளது.
  • பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 செயல் படுத்தப் பட்ட சில நாட்களுக்குள் இந்த விதிகள் அறிவிக்கப்பட்டன.
  • பல்வேறு அரசு அமைப்புகளால் நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் முறைகேடு செய்வதற்கு நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான முதல் தேசியச் சட்டம் இதுவாகும்.
  • பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா, 2024 ஆனது பிப்ரவரி 09 ஆம் தேதியன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, பிப்ரவரி 06 ஆம் தேதியன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு பிப்ரவரி 12 ஆம் தேதியன்று ஒப்புதல் பெறப்பட்டது.
  • மத்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணையம் (UPSC), பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), இரயில்வே, வங்கி ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் தேசியப் பயிற்சி அகாடமி போன்றவற்றால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகளைத் தடுப்பதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டத்தின் கீழ், எந்தவொரு நபரும் அல்லது நபர்களும் ஒரு வினாத்தாளை வெளியிட்டாலோ அல்லது விடைத்தாள்களை சேதப்படுத்தினாலோ குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுவார்கள்.
  • இது 10 லட்சம் ரூபாய் வரையிலான அபராதத்துடன் கூடிய ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையாக நீட்டிக்கப்படலாம் என்பதோடு இந்தச் சட்டத்தின் கீழான அனைத்து குற்றங்களும் நடவடிக்கை எடுக்கத் தக்கதாகவும் பிணை ஆணையில் வெளியில் வர முடியாததாகவும் இருக்கும்.
  • தேர்வுச் சேவை வழங்குநர்கள், நிகழ்ந்த குற்றத்தைப் பற்றி அறிந்திருந்தாலும் அதைப் புகாரளிக்காதவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்