ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26வது காலநிலைப் பங்குதாரர்கள் மாநாட்டில் “சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு சலவை வண்டி” பற்றிய தனது கருத்தாக்கத்திற்காக வேண்டி 2021 ஆம் ஆண்டிற்கான புவி தினக் கட்டமைப்பின் எழுச்சி நாயகியாக இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஆவார்.
இந்த நடமாடும் சலவை வண்டியானது சூரிய மின்தகடுகளின் மூலம் நீராவி சலவைப் பெட்டியை இயக்குகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னிச்சையான அமைப்பான இந்திய தேசியப் புத்தாக்க அறக்கட்டளையினால் உருவாக்கப்பட்ட டாக்டர் A.P.J. அப்துல் கலாம் IGNITE என்ற விருதினையும் இவர் பெற்றுள்ளார்.