TNPSC Thervupettagam

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காப்பீடு

December 26 , 2024 18 days 89 0
  • ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு மாநில அரசு உயர்த்தியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 3,20,264 நபர்களின் முதல் 48 மணி நேரங்களுக்கான மருத்துவமனை சிகிச்சைக்கான செலவிற்கு அரசு காப்பீடு வழங்கியுள்ளது.
  • தற்போது, ​​248 அரசு மற்றும் 473 தனியார் மையங்கள் உட்பட 721 சுகாதார மையங்கள், இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுகள் வழங்கப்பட்டன.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சிறப்பு பரிசும் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்