விமான நிலையத்தில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக்குத் தடை
January 8 , 2019 2149 days 683 0
இந்திய விமான நிலைய ஆணையமானது 16 விமான நிலையங்களில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியாலான பொருட்களுக்கு சமீபத்தில் தடை விதித்துள்ளது.
இந்த 16 விமான நிலையங்களும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியற்ற விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அவையாவன இந்தூர், போபால், அகமதாபாத், புவனேஸ்வர், திருப்பதி, திருச்சி, விஜயவாடா, டேராடூன், சண்டிகார், வடோதரா, மதுரை, ராய்ப்பூர், விசாகப்பட்டினம், புனே, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகியவை தடை விதிக்கப்பட்டுள்ள 16 விமான நிலையங்களாகும்.