TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் விமான போக்குவரத்துப் பன்திறன் மேம்பாட்டு மையம்

March 4 , 2018 2331 days 702 0
  • மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது சண்டிகர் விமான நிலையத்தின் பழைய முனையத்தில் இந்தியாவின் முதல் விமான போக்குவரத்துப் பன்திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது.
  • இந்திய விமான நிலைய ஆணையத்தின் (Airport Authority of India) பெரு நிறுவன சமூக பொறுப்புடைமையின் (Corporate Social Responsibility) வழியிலான   இத்தொடக்கத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் தொடக்க கட்டமாக சுமார் 2360 மாணவர்களுக்கு எவ்வித கட்டணமின்றி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்துடனான கூட்டிணைவால் (National Skill Development Corporation-NSDC) தொடங்கப்பட்டுள்ள இம்மையத்திற்கு ஏரோஸ்பேஸ் மற்றும் விமானப் போக்குவரத்து துறைசார் திறன் குழு (AASSC- Aerospace and Aviation Sector Skill Council- AASSC) ஆதரவு வழங்குகின்றது.
  • பயணம் மற்றும் சுற்றுலாவிற்கான பேர்ட் (Bird) கல்வி கூட்டுறவுச் சங்கம் இத்திட்டத்தினை செயல்படுத்துகின்றது.
  • தேசிய திறன் தகுதியுடைமை கட்டமைப்பினை (National Skill Qualification Framework- NSQF) ஒத்து AASSC- ஆல் வகுத்தளிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்