தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆனது, சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் (IATA) சான்றிதழ் பயிற்சித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் வகையில் இது வழங்கப்படுகிறது.
IATA தேர்விற்கான பதிவுக் கட்டணம், புத்தகக் கட்டணம், உணவு மற்றும் தங்குமிடக் கட்டணம் உள்ளிட்ட முழுப் பயிற்சித் தொகை 1.25 லட்சம் ரூபாயும் TAHDCO மூலம் வழங்கப் படும்.
இந்தப் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் IATA சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.