April 2 , 2020
1700 days
625
- கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விம்பிள்டன் போட்டித் தொடரானது ரத்து செய்யப் பட்டுள்ளது.
- இரண்டாம் உலகப் போரிற்குப் பின்பு இந்தப் போட்டித் தொடர் ரத்து செய்யப் படுவது இதுவே முதன்முறையாகும்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரானது முதன்முதலில் 1877 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
- அன்றிலிருந்து இது ஒவ்வொரு ஆண்டும் இலண்டன் நகரில் நடத்தப் படுகின்றது.
- இருப்பினும், இது இரண்டு நிகழ்வுகளின் போது ரத்து செய்யப்பட்டது.
- 1915 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை முதலாவது உலகப் போரின் காரணமாக முதன் முறையாக ரத்து செய்யப்பட்டது.
- 1940 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப் போரின் காரணமாக இது ரத்து செய்யப்பட்டது.
- இது உலகின் மிகப் பழமையான டென்னிஸ் தொடராகும்.
- இது நான்கு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றாகும்.
- பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவை இதரத் தொடர்களாகும்.
- இதுவரையில் புல் தரையின் மீது விளையாடப்படும் ஒரே தொடர் விம்பிள்டன் ஆகும்.
Post Views:
625