கார்லோஸ் அல்கராஸ், நான்கு முறை நடப்புச் சாம்பியனாக விளங்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சைத் தோற்கடித்து சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் பட்டத்தினை வென்றார்.
மானுவல் சந்தனா (1966) மற்றும் ரஃபேல் நடால் (2008, 2010) ஆகியோருக்குப் பிறகு விம்பிள்டன் பட்டத்தினை வென்ற மூன்றாவது ஸ்பெயின் நாட்டு வீரர் அல்கராஸ் ஆவார்.
பிஜோர்ன் போர்க் மற்றும் போரிஸ் பெக்கர் ஆகியோருக்குப் பிறகு விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இளம் வீரர் அல்கராஸ் ஆவார்.
நடால், சந்தனா மற்றும் செர்கி புருகுவேரா ஆகியோருக்குப் பிறகு, பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நான்காவது ஸ்பெயின் நாட்டு வீரர் இவர் ஆவார்.
21 வயதிற்கு முன்னதாக ஓபன் போட்டிகளில் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐந்தாவது நபர் அல்கராஸ் ஆவார்.